
தூத்துக்குடியில் பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் சசிகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டதாவது ஐயா நான் சமுதாய நலன் சார்ந்த விஷயங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறேன். புதிதாக வந்த தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு நான் வைக்கக்கூடிய கோரிக்கையானது தற்போதைய அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு உள்ள ரேஷன் அரிசியினை பொதுமக்களுக்கு வழங்காமல் தூத்துக்குடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பல புரோக்கர்கள் கடத்தல் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து ரேஷன் அரிசியை கடத்தல் செய்து தூத்துக்குடி டோல்கேட் அருகில் உள்ள சில்லாநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் ஒரு நாளைக்கு பல டன் அரிசியை பதுக்கி வைத்து பாலிஷ் போட்டு சன்னரக அரிசியாக செய்து வெளி மார்க்கெட்டுகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அனுப்பப்பட்டு வருகிறது ஆகையால் ஆலையின் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் அரிசி கடத்தக்கூடிய வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலையினை ஆய்வு செய்து ஆலையின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சித்தர் வேலாயுதம் மாவட்டத் தலைவர் மாரிச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.












