
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆறு பேர் தேனியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அந்த வாகனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். பெரியகானலில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மினி பேருந்து கவிழ்ந்தது. வாகனத்தில் 28 பேர் இருந்தனர். இவர்களில் 18 பெண்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் அடங்குவர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேசிய நெடுஞ்சாலை 85-இல் குறிப்பாக பெரியகானல் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவது தொடர்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் கடந்துள்ளது. இதில் மக்கள் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக இடைப்பட்டு சாலையின் அலைன்மென்ட் குறைவா என்பதை கண்டறிய வேண்டும். அதோடு ஆபத்தான பகுதிகளில் விபத்து எச்சரிக்கை போர்டுகள் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மூணாரில் அவசர காலா மற்றும் மல்டிஸபெஷயாலிட்டி ஹாஸ்பிடல் அவசியம் என்பது ஏன்?நீண்ட காலமாக எங்கள் உயிர் தான் உங்களுக்கு அவசியம் இல்லாத ஒன்று கேரளா ஆட்சியாளர்களே?சுற்றுலா பயணிகள் தான் உங்களுக்கு முக்கியம் என்ற அடிப்படையில் ஆவது விரைவில் ஒரு மருத்துவ மனை கட்டி தாருங்கள் இன்னும் இந்த மண்ணில் ஏற்படும் தூயரம் சற்று குறையட்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.












