போத்தனூர் ஆய்வாளர் அதிரடி ஒரே நாளில் நான்கு வழக்குகள் பதிவு..!!

ஒரே நாளில் போத்தனூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளது குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போத்தனூர்
காவல்துறை அதிரடி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த சில நாட்களாகவே போத்தனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வாளர் அசோக் குமார் அவர்கள் கண்காணித்து வருகிறார். போத்தனூர் பகுதிகளின் நடைபெறும் குற்றங்களை குறைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் ஆய்வாளராக அசோக் குமார் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறார்.

போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் வகையில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், வெள்ளலூர் குடிசை மாற்று வாரியம் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சிங்காநூரைச் சேர்ந்த ரோஷன் (25) என்பவரை விசாரணை செய்ததில், அவர் கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேலும், வெள்ளலூர் பட்டணம் ரோடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல், போத்தனூர் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அஜீஸ் ரஹ்மான் என்பவர், பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரிடம் கத்தியை காட்டி உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தி ரூ.400/- பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக எதிரி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2 நபர்களை காவல் துறையினர் மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் மற்றும் மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் டி-அடிக்ஷன் (De-Addiction) மையங்களில் சேர்த்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் போத்தனூர் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts