
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுப்படுகை பகுதியில் வசித்து வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி க. முருகேசன் என்பவரின் குடும்பத்தினருக்கு எதிராக தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(02.05.2026) அன்று காலை, ஊரில் நடைபெறவிருந்த திருவிழாவை முன்னிட்டு முருகேசன் அவர்களின் மனைவி வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
தகராறு வன்முறையாக மாறி, அந்த நபர்கள் முருகேசன் அவர்களின் மனைவியை வீட்டின் முன்புற சுவரில் தள்ளி, தலையில் மோதி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அவர் மயங்கி விழுந்ததால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அவர் மாற்றுத்திறனாளி என்பதைக் கேலி செய்து அவமதித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் மன உளைச்சல் மற்றும் பயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து, குற்றவாளிகள் மீது உடனடி FIR பதிவு செய்து கைது செய்யவும், தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலமுருகன் தஞ்சாவூர்.












