
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்ற சுதாகருக்கு பாராட்டு..
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோன அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் (மே 18) நடைபெற்றது. விழாவிற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவிற்கு முன்னாள் மாவட்ட சங்க செயலாளர் பொள்ளாச்சி வி ராமர் முன்னிலை வைத்தார் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ஸ்ரீதரன் வரவேற்று பேசினார் விழாவில் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிங்கான பள்ளியில் பயின்ற வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சுதாகருக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கடல் சார் விஞ்ஞானி திரு மாணிக்கம் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் முகமது. சந்திரன் மற்றும் கவிஞர் சூலூர் கனகராசனார் விஸ்வநாதன் மூத்த பத்திரிகையாளர் உதய பாஸ்கர் பொன் வல்லரசு செயற்குழு உறுப்பினர்கள் ராஜா ராம் ஜெய்சீலன் சிவா ஆறுமுகம் மகேஷ் இம்மானுவேல் சுதாகர் ரவி திருப்பூர் சிவா மேகலா ஏஞ்சல் ராதிகா பேபி ராணி உள்பட பலர் விழாவுக்கு கண் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் மூத்த 1963 முதல் 2025 வரை படித்த மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
வல்லரசு
விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டியில் வென்ற முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது விழாவில் கடல்சார் விஞ்ஞானி மாணிக்கம் பேசிய போது இந்த பள்ளி கழகப் புள்ளியாக இருந்து அரசு உயர்நிலைப் பிழையாக மாறி இப்பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளது.
இங்கு படித்த நான் உயர்நிலைப் பள்ளி படித்து கல்லூரியில் எம் எஸ் சி எம் பி எல் பி எஸ் டி நொடித்து கடல் சார்ந்த பல ஆண்டுகள் பணியாற்றி எனது வாழ்க்கையில் வெற்றிக்கு காரணமாக இருந்தது இந்த பள்ளி அன்று ஆசிரியர்கள் அடித்து மாணவர்களை படிக்க வைத்தார்கள் ஆசிரியர்கள் மீது மதிப்பு மரியாதையும் அதிக அளவு இருந்தது நமது வளர்ச்சிக்கு ஆசிரியர்களை பெரும்பங்காற்றுகின்றனர்.
நம் வாழ்க்கையில் இன்று வெற்றிகரமான மனிதனாக வாழ்வதற்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்றுத் தந்த ஆசிரியர்கள் இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அவரால் தான் இந்த உயரத்தை என்னால் எட்ட முடிந்தது இதே போல் எனது குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்து அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நல்ல பதவியில் உள்ளனர் அதற்கு என் வாழ்க்கையின் முதல் அச்சாரமாக விளங்கிய இந்த பள்ளியை தொட்டு வணங்குகின்றேன் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தாருங்கள் அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தாருங்கள் அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை செய்வார்கள் என்று பேசினார் விழாவில் ஐஓபி வங்கியின் மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற சூலூர் கவிஞர் கனகராசனார் தனது கருத்துரையில் நான் கழகப் புள்ளியா இருக்கும் போது இந்த பள்ளியில் பயின்றேன் 35 ஆண்டுகள் வங்கிப் பணியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றேன் எனது வளர்ச்சிக்கு எனது மகன்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கும் இந்த கல்வியை கற்றுத் தந்த இந்த பள்ளியே என்னை மேன்மையானவனாக மாற்றியது.
இன்று அனைவராலும் போற்றப்படும் கவிஞராகவும் தமிழ் மீது பற்று கொண்டவனாகவும் நான் விலங்க காரணம் எனது தமிழ் ஆசிரியர்களும் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இருந்தான் காரணம் ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் கல்வியையும் போதித்து இந்த பள்ளி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெற்று செல்கின்றனர் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விருந்த இடத்தை பிடிக்க நன்கு படித்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்று சிறந்த ஆளுமைகளாக வர வேண்டும் அறிஞர்களாகவும் கல்வியாளர்களாகவும் தொழில் அதிபராகவும் வர வாழ்த்துகிறேன் அதை தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்ற சுதாகர் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் எனக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியும் ஒழுக்கத்தையும் இரு கண்களாக கற்றுத் தந்த இந்த பள்ளி பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி உள்ளது சமீபத்தில் நடைபெற்று முடிந்த வால்பாறை சட்டமன்றத் தேர்தலில் என்னை இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த பொது மக்களுக்கும் நான் சார்ந்த கழகத்தின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 18 வயது முதலே எனக்கு பல்வேறு பணிகளை தந்து கிளை செயலாளராகவும் நகர செயலாளர் கவுன்சிலர் ஆகவும் இந்த பகுதி பெண்கள் வாடு என்பதால் எனது மனைவிக்கு கவுன்சிலர் பதவியில் தந்து மாவட்ட திட்டங்கள் உறுப்பினராகவும் தேர்வு செய்து இன்று என்னை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த பள்ளிக்கு மட்டுமின்றி நான் பிறந்த இந்த மண்ணிற்கு அனைத்து விதத்திலும் நன்மை செய்வேன் என்று உங்கள் முன் உறுதி ஏற்றுக் கொள்கின்றேன்.
59 கழக நிர்வாகிகள் போட்டியிட்டு எனக்கு வாய்ப்பு அளித்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வரும் நான் நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இந்த விழா சிறக்க முன்னேற்பாடுகளை செய்த சங்கத்தின் செயலாளர் ராமர் அவர்களுக்கும் அவருடன் இணைந்து செயலாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் 1963 முதல் இப்போது வரை பயின்ற மாணவர்களுக்கு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார் விழாவில் முன்னாள் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் படித்து உயர்ந்த நிலை அடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது முடிவில் ராஜாராம் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வல்லரசு.












