​வால்பாறையில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம்! – சிபிஎம் செயலாளருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை
தமிழக முதல்வராகத் திரு. விஜய் அவர்கள் பொறுப்பேற்றதை முன்னிட்டு வால்பாறை நகரத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிக்குத் தோள் கொடுத்த தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு நிர்வாகிகள் இத்தருணத்தில் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றி கழக நகரச் செயலாளர் ஆண்ட்ரூஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் பரமசிவம் அவர்களை நேரில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது தோழர் பரமசிவம் பேசுகையில்
​வால்பாறைப் பகுதியின் முதுகெலும்பாகத் திகழும் சாமானிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது நமது முதற்கடமையாகும். வால்பாறையின் வளர்ச்சிப் பணிகளில் அனைவரும் எவ்வித சுயநலமுமின்றி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒன்றிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

உற்சாகமாக நடைபெற்ற இந்த விழாவில் நகர இணைச் செயலாளர் அலிபாய் தொழிற்சங்கத் தலைவர் பிரகாஷ் முக்கிய நிர்வாகிகள் மணிகண்டன், ரியாஸ் மற்றும் கழகத் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts