​வால்பாறை நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் எப்போது.? முடங்கிய வளர்ச்சிப் பணிகள் முதல்வருக்கு சி.பி.எம். கோரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் வால்பாறை நகராட்சியில் நிரந்தர ஆணையர் இல்லாததால் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளும் ஸ்தம்பித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை நகராட்சியில் நீண்டகாலமாக நிரந்தர ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக நகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் கேள்விக்குறியாகியுள்ளன. ​சாமானிய மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ​சுற்றுலாப் பயணிகள் அடிப்படை வசதிகள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் நிலவுகிறது.

வழக்கமாகக் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நடத்தப்படும் கோடை விழா இந்த ஆண்டு நடத்தப்படாதது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான நிர்வாகத் தலைமை இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

​இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை 𝗣.பரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில்
​வால்பாறை நகராட்சியின் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்கவும் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும். வால்பாறை நகராட்சிக்குத் திறமையான நிரந்தர ஆணையரை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை
நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts