​வால்பாறை பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக மோசமாக உள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சோலையார், உபாசி, மானாம்பள்ளி, சேக்கல்முடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் அவசர காலங்களில் மருத்துவ வசதிகளைப் பெறக்கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயலாளர் ப. பரமசிவம் அளித்துள்ள அந்த மனுவில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் மக்கள் வரிப்பணத்தைப் பயனுள்ள திட்டங்களுக்குச் செலவிடாமல் தேவையற்ற பணிகளில் வீணடிக்கிறது. நல்ல நிலையில் இருக்கும் பேருந்து நிலையங்கள் மற்றும் மயானக் கூரைகளைச் சீரமைப்பதாகக் கூறி பல லட்சம் ரூபாயைச் செலவு செய்வதும் சில நேரங்களில் அவற்றை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதும் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துவிட்டு பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான சாலை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தற்போது நகராட்சி மூலம் செய்யப்படும் பணிகள் பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் இது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தகுந்த சாலை வசதிகளைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்

-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts