
கேரள மாநிலம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்றது. அதில் அதிகபட்சமான வாக்கு வித்தியாசத்தில் 100 இடங்களை பிடித்து மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டது கடைசி நிலவரப்படி காங்கிரஸ் 100 இடத்தையும் இடதுசாரிகள் 35 இடத்தையும் பாஜக 3 இடத்தையும் தனி போட்டியாளர்கள் இரண்டு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 10 ஆண்டுகால இரண்டு முறை ஆட்சியில் இடதுசாரிகளே கேரளாவை ஆண்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியானது முன்னெடுப்பு வைத்துள்ளது.
தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் எப் ராஜா அவர்கள் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு ஜாதி மத இன பாகுபாடு இன்றி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வாரா? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
ஒவ்வொரு முறையும் வாய்ப்புகள் அளிக்கப்படும் பொழுது மக்களுடைய தேவைகள் முழுவதுமாக பூர்த்தி செய்யப்படுவதில்லை ஆனால் இம்முறை மாறாக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற சட்டமன்ற உறுப்பினர் எப் ராஜா அவர்களுக்கு நாளைய வரலாறு செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.










