முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் அன்று சிறப்பு வழிபாடு நடத்தப் பட்டு தங்கத்தேர் இழுக்கப் பட்டது!!

கோவை: கடந்த ஒரு மாத ஆட்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒரு முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இருந்து வருகின்றார். அவரைப்பற்றி தூற்றுபவர்களை பற்றி நாங்கள் ஒரு போதும் கவலை பட மாட்டோம்.. கோவை சாய்பாபா கோவிலில் தமிழக வெற்றிக்கழக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் பேட்டி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாட பட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டது. இந்த நிலையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் தலைமையில், கோவை சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த பட்டு தங்கத்தேர் இழுக்க பட்டது.

பொதுவாக கோவை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ள நாகசாயி மந்தீர் திருக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாட்களில், இக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும் இந்த நாளில் கூடுதல் சிறப்பம்சமாக தமிழக வெற்றிக்கழகம் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாய்பாபா எழுந்தருளி திருக்கோவிலை சுற்றி வந்தார். இதில் திறலான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபா அருள் பெற்றனர். பின்னர் அனைவருக்கும் திருக்கோவில் சார்பாக பிரசாதங்கள் வழங்கபட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக புறநகர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக், தமிழக வெற்றிக் கழக மாவட்ட தொண்டரணி மகேஷ்குமார், கனேஷ் குமார், ஆதவ் ராஜ், அம்பிகா சரவணன், மற்றும் விக்னேஷ் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் கூறியதாவது;
தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆட்சியாக நடைபெற்று வருகின்றது என்பது பொதுமக்கள் எங்கள் மீது காட்டும் அன்பில் தெரிவிக்கின்றது. எத்தனை நல்லது மக்களுக்கு செய்தாலும், குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குறை கூறி கோண்டு தான் இருப்பார்கள் அதனை தமிழக வெற்றிக்கழக தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தலைவர் விஜய் தெரிவித்துள்ளார் அதன் படி நாங்கள் அக்கருத்துகளை பற்றி எல்லாம் கவலை பட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்ததுடன் இன்றைய தங்கதேர் இழுத்ததன் நோக்கமே மக்களின் முதல்வராக உள்ள தலைவர் விஜய் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts