
கோவை மாவட்டம் பொள்ளாச்சி
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 25.06.2026 அன்று பொள்ளாச்சியில் போதையில்லா பொள்ளாச்சி என்ற முழக்கத்துடன் மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித எழுத்து வடிவ (Human Formation) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் டாக்டர் ராஜலட்சுமி அவர்கள் வரவேற்று பேசினார்.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. நித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து என்.ஜி.எம். கல்லூரியில் மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி இளைஞர்கள் போதையிலிருந்து விலகி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. நவீன் குமார் மற்றும் டாக்டர் உத்தராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியன் டென்டல் அசோசியேஷன் (IDA) இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (IMA) மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து நடத்தின.
என்.ஜி.எம். கல்லூரி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பி.ஏ. கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் உற்சாகமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் IDA, IMA நிர்வாகிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட மாயா பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. கமலக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.
மேலும் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. மா. வெற்றிவேல் அவர்கள், பல்வேறு கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியின் வெற்றிக்காக சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி முக்கிய பங்காற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை முழுமையாக பதிவு செய்து விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சேவாலயம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு. ஞானசேகர் மற்றும் அதன் நிர்வாகிகளும், பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவையின் பொறுப்பாளர் திரு. வெள்ளை நடராஜ் அவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு அணியாக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியாக என்.ஜி.எம். கல்லூரி சென்றடைந்தனர். மற்றொரு அணியாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பிருந்து பி.ஏ. கல்லூரி மாணவர்கள் பேரணியாக புறப்பட்டு என்.ஜி.எம். கல்லூரியை வந்தடைந்தனர்.
என்.ஜி.எம். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் “Say No to Drugs” என்ற வாசகத்தை மனித எழுத்து வடிவில் அமைத்து போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் திரு. சின்னக்காமனன் அவர்கள் போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, போதை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்கச் செய்தார். மாணவர்கள், மருத்துவர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பேரணி முழுவதும்
போதையை ஒழிப்போம் – தமிழகத்தை காப்போம்,
போதையை ஒழிப்போம் – அடுத்த தலைமுறையை வாழவைப்போம்,
போதையில்லா தமிழகம்,
போதையில்லா பொள்ளாச்சியை உருவாக்குவோம்,
என்ற முழக்கங்கள் விண்ணை முட்டின.
கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒருமித்த பங்கேற்பு, போதைப்பொருள் ஒழிப்பிற்கான சமூக உறுதியை வெளிப்படுத்தியது.
இளைஞர்களையும் சமூகத்தையும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் உயரிய நோக்கில் நடைபெற்ற இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி போதையில்லா தமிழகம் – போதையில்லா பொள்ளாச்சி என்ற இலக்கை நோக்கிய மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியது.
இறுதியாக டாக்டர் கிருத்திகா அவர்கள் நன்றியுரை வழங்க தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
STAR M.சுரேஷ் குமார்.










