
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்ட நபர் ஒருவர், ஒரே வீட்டை இரு பெண்களுக்கு காட்டி தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர். பத்திரிக்கையாளர் என்ற அடையாளத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடுநிலையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவார்களா?
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.










