
கோவை மாவட்டம் ஆனைமலை கணபதிபாளையத்தில் உள்ள கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடப்பு கல்வியாண்டின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சாதனை படைத்துள்ளது.
தேர்வெழுதிய 99 மாணவ, மாணவிகளும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100% வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.
S. தனுஸ்ரீ – 493 மதிப்பெண்கள் பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் குவித்து அசத்தியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
N. தருண் – 490 மதிப்பெண்கள் கணிதப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று கடுமையான போட்டிக்கிடையே இரண்டாமிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
N. தரணிஷ் மற்றும் M. கவின் – 489 மதிப்பெண்கள் நூலிழையில் மூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலால் மாணவர்கள் பல பாடங்களில் முழு மதிப்பெண்களை அள்ளியுள்ளனர்.
கணிதப் பாடம் – S. தனுஸ்ரீ, N. தருண், N. தரணிஷ், P. தருண் கிருஷ்ணன் மற்றும் S. ரூபேஷ் ஆகிய 5 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடம் – S. தனுஸ்ரீ, P. தருண் கிருஷ்ணன், R. தர்ஷனா ஸ்ரீ, S. தர்ஷன், S.G. ஸ்ரீ சரண் மற்றும் G. மனோஜ் ஆகிய 6 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை தடம் பதித்துள்ளனர்.
சமூக அறிவியல் பாடம் – N. தரணிஷ் மற்றும் M. ரத்தின பிரபா ஆகிய 2 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பள்ளியின் ஒட்டுமொத்த மதிப்பெண் தரவரிசையில், 35 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 56 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுப் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றித் தாரகைகளாக வலம் வரும் முதல் 5 இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பள்ளி முதல்வர் சண்முகம், செயலாளர் உமா மகேஸ்வரி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பெற்றோர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில்
கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த M.கார்த்திக் என்ற மாணவன் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார் என்பதும் அந்தச் சாதனைப் பயணத்தை இவ்வாண்டு மாணவர்களும் திறம்படத் தொடர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.












