
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகராட்சி மைதானத்தில் த வெ க தொண்டர்கள்,உறுப்பினர்கள்,செயலாளர்கள் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர்கள் இணைந்து வருங்கால கால்பந்து வீரர்களை விளையாட வைத்தார்கள். அதில் சிறந்த வீரர்களுக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



இந்த கால்பந்து விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தரவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நமது நாளைய வரலாறு ஆன்லைன் செய்திகளில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்த கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . ஆகையால் வால்பாறையில் மிகப் பிரமாண்ட முறையில் இந்த மைதானம் நடைமுறைக்கு வரவேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரிகள் வாகன ஓட்டுனர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் கேட்டுக்கொள்கிறார்.
இந்த கால்பந்து விளையாட்டு மைதானம் அழிந்து போகாமல் இருக்க வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மைதானத்தை சீரமைத்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார் பேபி.












