வால்பாறையில் முழு நேரமும் ஆர்.டி.ஓ. அலுவலகம் இயங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு சி.பி.எம். கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) முறையாகச் செயல்படாமல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) செயலாளர் பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
​வால்பாறை பகுதியில் வசிக்கும் சாமானிய மக்கள் தங்களின் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் சார்ந்த பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுக வேண்டியுள்ளது. ஆனால் இங்குள்ள அலுவலகம் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவதால் அவசரத் தேவைகளுக்கு மக்கள் சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பொள்ளாச்சி அல்லது கோவைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதற்காக 40 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து சுமார் 3 மணி நேரம் ஆபத்தான மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் பணமும், பொன்னான நேரமும் வீணாகிறது.

இதேபோல் வால்பாறையில் உள்ள பல அரசு அலுவலகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மக்கள் சேவகர்களான அரசு அதிகாரிகள் இந்த அலுவலகங்களில் தினந்தோறும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். வால்பாறை பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தினமும் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்

உங்கள் STAR M.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts