
கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது. வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் பள்ளி தலைமை சிவனேசன் முன்னிலையில் இப்பேரணி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை மெயின் ரோடு வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் திரளான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நாங்கள் போதைக்கு அடிமையாக மாட்டோம் என்று முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் பேசியதாவது
போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபரின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன்அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கும் பெரும் பாதிப்பும் தீங்கும் ஏற்படுகிறது. இளைஞர்களாகிய உங்கள் கையில்தான் நாட்டின் வருங்காலம் உள்ளது. எனவே நீங்களும் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை இல்லாத தமிழகத்தையும் உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இப்பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு முயற்சி வால்பாறை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்போம் போதை இல்லாத சமுதாயத்தைப் படைப்போம் என்று நாமும் உறுதியேற்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் வால்பாறை Pபரமசிவம்.




