
கோயம்புத்தூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்
டி.எஸ்.பி வீ. ஜெயச்சந்திரன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா கோயம்புத்தூர் அருகிலுள்ள சோமனூர் கொங்கு வேளாளர் கலையரங்கத்தில் 01.07.2026 அன்று
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவல்துறையில் சுமார் 30 ஆண்டுகள் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த கடமை உணர்வுடன் பணியாற்றி முத்திரை பதித்த டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் மட்டுமல்லாமல் மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்பையும் சமமாகப் போற்றிய ஒரு சிறந்த காவல் அதிகாரியாக அவர் திகழ்ந்துள்ளார். குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு அவர் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் இயற்கை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீது அவர் காட்டிய அன்பும் அக்கறையும் பொதுமக்களால் இன்றும் நெகிழ்ச்சியோடு நினைவு கூரப்படுகிறது.
டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் அவர்களின் பணிநிறைவையொட்டி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் மா. வெற்றிவேல் நேரில் கலந்துகொண்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்
கடமைக்காக உறுதியாக நின்றாலும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் கருணைமிக்க இதயம் கொண்டவர் ஐயா ஜெயச்சந்திரன் அவர்கள். அவரது ஊக்கமும் ஆதரவும்தான் எங்கள் அறக்கட்டளை மூலம் பறவைகளின் தாகம் தணிக்க பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்தது.
அதேபோல் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் முன்னெடுக்க அவர் வழங்கிய வழிகாட்டுதலும் ஊக்கமும், சமூக நலனில் அவருக்கும் இருந்த ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது.
— மா. வெற்றிவேல், நிர்வாக அறங்காவலர்.
பணிநிறைவு என்பது ஒரு பணியின் முடிவல்ல வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்ட விழாக்கால அமைப்பாளர்கள் அவர் பெற்றுள்ள பல்லாண்டு கால அனுபவமும் அறிவும் இனிவரும் காலங்களிலும் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ வேண்டும் என வாழ்த்தினர்.
அவர் இறைவனின் அருளால் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனநிறைவு மற்றும் குடும்ப மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என விழாவில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது இதயப்பூர்வமான பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
உண்மை எப்போதும் உரக்கச் சொல்லும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்.








