அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் புகார் மனு!!

கோவை: பொய் புகார் அளித்து, தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக, அவதூறு பரப்பி வரும் பிரதீப் ராஜன், மற்றும் வீரமணி, ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் மனு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான அன்னக்கிளி. இவர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தனது குடும்பத்தினருடன் இந்த பகுதியில் தான் வசித்து வருவதாகவும், வேடப்பட்டி பேரூராட்சியில், 13வது வார்டு உறுப்பினராக தான் உள்ளதாகவும், வேடப்பட்டி சாலையில் பெட்டிக்கடை வைத்து, பூ வியாபாரம் செய்து வருவதாகவும், அந்த வகையில், கந்துவட்டி தொழில் செய்து, சீட்டு கம்பெனி நடத்தி வருகின்ற பிரதீப் ராஜன் என்பவரை, கடந்த 20 ஆண்டுகளாக தனக்குத் தெரியும், அவர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல், பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, அதன் மூலம் பொதுமக்களின் பணத்தினை ஏமாற்றிவிட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கும், மேற்படி நபருக்கும் எந்த விதமான, வரவு செலவுகள் இல்லை எனவும், அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், நான் சீட்டு எடுத்துக் கொடுத்த நபர்களுக்கும் 11 லட்சத்திற்கும் மேற்படியான தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார். தொடர்ந்து மேற்படி சீட்டு நடத்தி, சீட்டுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் அவர் என்னிடம் உதவி கேட்பார். அந்த சூழ்நிலைகளில் பொதுமக்களிடம் அவருக்காக பேசி பணத்தை விரைவில் தருவார், நான் பெற்று தருகின்றேன் என கூறி பிரச்சினைகளை சரி செய்து தருவதாக நான் கூறியிருந்தேன், ஆனால் பிரதீப் ராஜன் சீட்டு போட்ட நபர்களுக்கு முறையாக பணம் வழங்காமல் ஏமாற்றி வந்தவுடன், பலமுறை அவருக்காகவே நான் கடனை திருப்பி தருவதாக பொதுமக்களிடம் அளித்துள்ளதை, துடுப்புசிட்டாக பயன்படுத்தி, இந்த பிரதிப் ராஜன் மற்றும் அவரது உறவினர் வீரமணி ஆகிய இருவரும் இணைந்து, எனது வீட்டிற்கு வந்து விட்டில் இருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது சம்பந்தமாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். தற்பொழுது நான் அவரிடம் பணமோசடி செய்து விட்டதாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாக தொடர்ந்து, தன் மீது அவதூறு பரப்பி வருகிறார், அவர் கூறுவதில் எந்த வித மூதாந்திரமும் இல்லை எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts