கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!!

கந்தர்வகோட்டை ஜீலை 27

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி மாலை அணிவித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசும் பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது அவரது புகழ்பெற்ற அறிவியல் சேவையையும், இளைஞர்களுக்கு அவர் அளித்த ஊக்கத்தையும் நினைவு கூரும் நாளாகும்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் உயர்ந்தவர். நாட்டின் விண்வெளி மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கு வகித்ததால் “ஏவுகணை மனிதர்” என்றும், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீது அன்பு செலுத்தியதால் “மக்கள் ஜனாதிபதி” என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.

அறிவியல் சாதனைகள்

1960-ல் டிஆர்டிஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியைத் தொடங்கினார்.
1969-ல் இஸ்ரோ இணைந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான (எஸ்.எல்.வி-III) திட்டத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளை வெற்றிகரமாக உருவாக்கினார். என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, நிவின், செல்விஜாய், கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts