
கந்தர்வகோட்டை ஜீலை 31
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார் நலத்திட்டத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பொது மருத்துவ மற்றும் தொழுநோய் பரிசோதனை செய்யப்பட்டது.


அதனைத் தொடர்ந்து தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம் மூலம் ஏழு அம்ச கருப்பொருள் பற்றி நலக்கல்வி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் பரணிதரன் தலைமையில் மருத்துவர்கள் டெரிக் , திவ்யபாரதி தேசிய குழந்தைகள் மற்றும் பள்ளி சிறார் நலத்திட்ட குழுவினர் மூலம் தொழு நோய்கள் எவ்வாறு பரவுகிறது என்றும், அதனை எவ்வாறு கண்டறிந்து தடுத்தல் குறித்தும், டெங்கு பரவுதல் அதை எவ்வாறு தடுத்தல் மற்றும் நோயிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தினார்கள். போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,தன் சுத்தம் சுகாதாரம் விளக்கி கூறினார்கள். முன்னதாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் நல்லமுத்து, பூபதி, மகேஸ்வரன், கோகுல் ஆகியோர் நலக் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்விஜாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.






