ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026: கோவையில் தகுதிச் சுற்றுப் போட்டி!!

ட்ரன்ஸ் ஃபேஸ் ஆஃப் கோயம்புத்தூர், ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026 தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள இளம் திறமை யாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு பெரிய மேடையை வழங்கும் நோக்கில், பிரபல நிறுவனங்களான ட்ரன்ஸ், நேச்சுரல்ஸ் இணைந்து நடத்தும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026 போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி கோவையில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஐரிஸ் ஈவென்ட்ஸ் நிறுவனம் தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு, இந்த ஆண்டு போட்டி ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற புதிய பெயரில் நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாநிலம் முழுவதிலும் இருந்து திறமையான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ஏற்கனவே, மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் வெற்றிகரமாக தகுதிச்சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள், மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். கோவையில் நடை பெறும் தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும், அவர்களுடன் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இணைந்து, மாநிலப் பட்டத்திற்காகப் போட்டியிடுவார்கள்.
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நேச்சுரல்ஸ் சலூன்களில் அழகுக்கலை மற்றும் ஆளுமை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

தகுதிச்சுற்று கோவையில் உள்ள ட்ரன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி பிரிவுகளில்
பிரவீனா பெண்களுக்கான பிரிவில் முதலிடமும், தேஜஸ்ஸ்ரீ, வன்சிகா ஆகியோர் 2,3 வது இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் சரண் முதலிடமும், சுகைல் அஸ்லம் 2ம் இடமும் பெற்றனர்.

மாநில இறுதிப் போட்டி சென்னை ஜி.ஆர்.டி ராடிசன் ஓட்டலில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐரிஸ் ஈவென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லதா கிருஷ்ணா செய்திருந்தார். நிகழ்ச்சியில் நேச்சுரல்ஸ் பயிற்சியாளர் கோகிலா, டாக்டர் செந்தில் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts