கேரளாவில் நேற்று ஒரே நாளில் 51,739 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 3,09,489 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 42,643 இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவரில் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பதாக தகவல் சொல்கிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் நோய்த்தொற்றின் வேகம் சற்றும் குறையாமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு நோய் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.