உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்த SDPI கட்சி…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சி கோவை மாநகரில் போட்டியிட கூடிய வார்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.இந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக 8 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி (77- பர்சானா, 78-சைபுநிசா, 79-அஸ்மா, 82- ரஷீதா பேகம், 84- அலீமா, 86- முஸ்தபா, 87-சிவக்குமார், 95-முஹம்மது சலீம்) ஆகியோர் முதல்கட்டமாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுவாதாக தெரிவித்தார். கோவையில் முதல் கட்டமாக 8 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இனி அடுத்தடுத்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாங்கள் தணித்து களம் காண்பதாகவும் கூறிய அவர் நேர்மையான உள்ளாட்சி என்பதே எங்களின் தேர்தல் வாக்குறுதி என தெரிவித்தார். மேலும் அமமுக கூட்டணி குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை இல்லை என தெரிவித்தார். முந்தைய ஆட்சியிலும் சரி தற்போதைய ஆட்சியிலும் சரி இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகால் கூட இல்லை என்றும் எஸ்டிபிஐ கட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp