தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் காட்டுதைக்கா தெருவைச் சேர்ந்தவர் செய்யதுஅலி. இவரது மகன் காதர்மீரான் (வயது30). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இவர் காயல்பட்டினம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலையில் புறப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8 மணி அளவில் கொட்டாம்பட்டி புறவழிச்சாலையில் வந்தபோது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த காதர்மீரான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற கொட்டாம்பட்டி காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொட்டாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் ரமணி விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்.
– மதுரை வெண்புலி.