கோவை- திருச்சி சாலையில் ரெயின்போவில் இருந்து பங்கு சந்தை வரை 3 கி.மீ. தூரத்துக்கு ரூ.232 கோடியிலும், மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் 1 கி.மீ. தூரத்தில் ரூ.50 கோடியிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் மேம்பாலம் இறங்கும் பகுதி பணிகள் முழுமை அடையவில்லை. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணி முடிந்ததும் இறங்குதள பணி முடிந்துவிடும். மேம்பாலம் ஏறும் பகுதியான ரெயின்போ பகுதியில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டியது உள்ளது. மாநகராட்சி பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும். இதேபோல் கவுண்டம்பாளையத்திலும் சர்வீஸ் சாலை பணிகள் நடைபெற வேண்டியது உள்ளது.
2 மேம்பால பணிகளும் விரைவில் முடிவடைந்து விடும் என்பதால் வருகிற மார்ச் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலங்கள் திறக்கப்படுவதன் மூலம் திருச்சிரோடு, மேட்டுப்பாளையம் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.