கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நீல்ஜார்ஜ், 21 என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார் இவருடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். எதிர்பாராதவிதமாக செட்டிபாளையத்தில் இருந்து பெரியகுயிலி செல்லும் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த நீல்ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் காரில் வந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.