நாட்டு மருத்துவம் பற்றிய ஓர் விழிப்புணர்வு! ஒவ்வொரு மனித சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனை சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப்பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்” கூறுவார். ETHNOMEDICINE, FOLK MEDICINE, POPULER MEDICINE, POPULER HELTH CULTURE, ETHNOIATRY, ETHNOATRICS) மிகப் பழமையான மருத்துவமுறைகளில் ஒன்றாக ஆயுர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவர். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது.
நாட்டுப்புற மருத்துவ முறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றி சில குறிப்புகளை எழுதியுள்ளனர். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம் சமுக அமைப்போடு பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனர். பழங்குடி மக்களிடம் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்திவருகின்றனர்.
வீட்டு வைத்தியம் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் புழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாக திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டு பொருள்கள் மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர் பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.
வெந்த + அயம் : வெந்தயம்
அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது
“வெப்பம் + இல்லை : வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!”
“கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!”
“அகம் + தீ : அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!”
“சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!”
“காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.! காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!”
“வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!”
“பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!”
“கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!”
இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!
“செம்மொழி” தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!
நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!
அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!” மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.