தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழக கேரள எல்லைப் பகுதியிலுள்ள கள்ளு கடைகளுக்கு கேரளா அரசு விடுமுறை அறிவித்துள்ளது இதனால் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள கள்ளுகடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன அதே சமயம் தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளை நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அடைக்காமல் திறந்தே வைத்துள்ளது தமிழக அரசு
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை கேரளா அரசு பின்பற்றும் போது தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றாத ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிடம் முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.