இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வருவாய்க்கு 30% சதவீத வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கிரிப்டோகரன்சி போன்று ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை சட்டபூர்வமாக்க வதற்கான பாதையில் இந்தியாவும் பச்சைக்கொடி காட்டும் வகையில் இணைந்துள்ளதால் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது. இது வரவேற்கத்தக்கதாக செய்தியாக உள்ளது என கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
மேலும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சென்ற ஆண்டு சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி களை அதிகம் ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.