கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாவட்டத்தில் 100 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 99 வது வார்டு தி.மு.க வேட்பாளர் அஸ்லாம் பாஷா, தங்களது கூட்டணி கட்சியின் தலைவர்கலை அழைத்து கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் – முகமது இஸ்மாயில், முகமது ஹாரூன் – DCC, V.C. முருகன், ராபியா, கருப்புசாமி, பர்வீன், அசார், அசாருதீன் – இளைஞர் காங்கிரஸ். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏபிடி ஆறுமுகம், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் அனைத்து கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, ராஜேந்திரன்.