கோவை மாவட்டம் நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத்தலைவராக பதவி வகிப்பவர் சின்னராஜ் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான கடை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக இவருக்கு பொருளாதார நிலை சான்று ( சால்வன்சி ) தேவைப்பட்டுள்ளது.
இந்நிலையில்
தனக்கு 15 லட்சம் ரூபாய்க்கு பொருளாதார நிலை சான்று வழங்குமாறு கோரி வருவாய்த்துறையில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கென அரசுக்கு செலுத்த வேண்டிய 6000 ரூபாய் கட்டணத்தையும் செலுத்தி நிலையில்
அவரது விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஏற்று கடந்த மாதம் 13ம் தேதி ஒப்புதல்
அளித்திருந்த நிலையில்
சான்றிதழ் வழங்க வேண்டிய கோவை வடக்கு தாசில்தார் கோகிலா மணி சான்றிதழ் வழங்க தனக்கு லஞ்சமாக 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று
கேட்டுள்ளார்.
இது குறித்து சின்னராஜ் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தநிலையில் போலீசார் ஆலோசனைப்படி சின்னராஜ் பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தார் அதை தாசில்தார் கோகிலாமணி வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரை கைது செய்த தகவல் பரவியதும் வடக்கு தாலுகா அலுவலகத்தில் சுற்றித்திரிந்த புரோக்கர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
புகார்தாரர் சின்னராஜ் கூறியதாவது பொதுமக்களுக்கு சேவை அளிக்க வேண்டிய அரசு உயர் அதிகாரி லஞ்சப்பணத்தை வாங்கி கல்லாப்பெட்டியில் போடும் வியாபாரி போல நடந்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது நான் ஊரக உள்ளாட்சியில் பொறுப்பில் இருப்பதை தெரிந்து கொண்ட பிறகும் லஞ்சம் வசூலிப்பதில் தாசில்தார் உறுதியாக இருந்தார் இத்தகைய அதிகாரிகள் தப்பிக்கக்கூடாது என்பதால் தான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தேன் என்றார்.
-M.சுரேஷ்குமார்.