கோவை மாநகராட்சி தேர்தலில் 71 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பஞ்சாப்பை பூர்விகமாக கொண்ட டோனி சிங் என்பவர் போட்டியிடுகிறார்.
கவுன்சிலர் பதவியை குறி வைத்து களமிறங்கியுள்ள டோனி சிங்கிற்கு நடிகர்கள் பாக்யராஜ் மற்றும் நிழல்கள் ரவி ஆகிய இருவரும் வாக்குக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பெயரில் மட்டுமே சிங் இருப்பதாகவும் உள்ளத்தாலும் உணர்வாலும் அவர் தமிழர் எனக் கூறி நடிகர் பாக்யராஜ் வாக்கு சேகரித்தார்
மேலும் டோனி சிங்கும் நிழல்கள் ரவியும் கோவையில் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பூர்வீகம் பஞ்சாப் என்றாலும் டோனி சிங் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் கோவையில் தான் அதனால் தமிழர் என்று பெருமையோடு தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
டோனி சிங் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதை முதலில் வேடிக்கையாக பார்த்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் இப்போது அவருக்கு எதிராக தீவிர தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் 71-வது வார்டு பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது நிதர்சனம்.
-M.சுரேஷ்குமார்.