கோவை புட்செல் போலீசாருக்கு ரேஷன் அரிசி பதுக்கி விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில், காந்திபுரம் டாடாபாத் பகுதியில் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சலாம் என்பவர் பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.இந்த அரிசியை, சுற்று வட்டார பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு பெற்று, வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. சலாமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தண்ணீர்ப்பந்தல் ரோட்டில் கண்ணன் என்பவரிடம் இருந்து 3700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.