கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன அதில் அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர்
கோவை மாநகராட்சி வார்டு 96 ல் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கைப்பை சின்னத்தில் கேபிள் B.ரமேஷ் என்ற வேட்பாளர் போட்டியிடுகின்றார்
கைப்பை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கேபிள் B.ரமேஷ் அவர்கள் அந்தப் பகுதி மக்களின் நன்கு பரிச்சயமான ஒருவராக உள்ளார். மேலும் மக்களுக்காக பணியாற்ற மிகுந்த ஆர்வம் உள்ளவராக உள்ளார்.
வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96வது வார்டில் கைப்பை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கேபிள் B.ரமேஷ் அவர்கள் என்னை இந்த 96 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பேன் என்றும் மேலும் 96வது வார்டில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெரு விளக்கு அமைப்பது மற்றும் பராமரிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்வது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்த்து வைப்பேன் என்று மக்களிடம் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஒரு கவுன்சிலராக என்னால் மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்ய முடியுமோ அனைத்து வேலைகளையும் நேரம் காலம் பார்க்காமல் சிறப்பாக செயல்பட்டு செய்து கொடுப்பேன் என்றும் நான் வெற்றி பெற்றால் 96 வது வார்டில் இ-சேவை மையம் அமைத்து தருவேன் எனது வார்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக தருவேன் என்றும் இதுபோன்று ஒவ்வொரு மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுத்து சரி செய்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்துமக்களிடம் கனவாக்குகளை சேகரித்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
நிருபர்கள்:
ஈஷா
சி.ராஜேந்திரன்