கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. மொத்தம் 81 ஆயிரத்து 418 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை அதிமுக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியது. இம்முறையும் நகராட்சியை தக்க வைத்துக் கொள்ள ஒரு வார்டை மட்டும் கூட்டணி கட்சியான த.மா.கா வுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 35 வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
திமுக கூட்டணியில் கொ.ம.தே.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சி களுடன் தி.மு.க வுக்கு உடன்பாடு எட்டப்படாததால் அக்கட்சியினர் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு சேர்த்து 5 இடங்கள் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 31 இடங்களில் தி.மு.க போட்டியிடுகிறது.
தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் அக்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
அ.தி.மு.க வின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்னர், இருமுறை தங்களது வேட்பாளர்கள் பட்டியலை மாற்றியது, பெரும் பாலும் புதுமுக வேட்பாளர்களை களமிறக்கியது என பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்ற தி.மு.க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.