போத்தனூரில் பரபரப்பு இரு கட்சியினர் இடையே மோதல் காவல் நிலையம் முற்றுகை..!!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாகநடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில்
திமுக அ.திமுகமற்றும் இதர கட்சிகள் களமிறங்கி நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். நேற்றைய தினம் 6 மணியுடன் இறுதிக் கட்ட பிரச்சாரம் முடிவுக்கு வந்தது நிலையில் குறிச்சி பகுதியில் 100 வது வார்டில் திமுக அதிமுக கட்சியினர் இடையே திடீரென வாக்குவாதம் மோதலாக மாறியது இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் திமுக கட்சியினர் போத்தனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலு மணியை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பிய திமுகவினர் காவல்துறையினர் பேச்சுவார்த்தைகள் மூலம் அனைவரும் கலைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ராஜேந்திரன், ஈசா.