கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி களம் காணும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் வால்பாறை திருவிழா காலம் போன்று காட்சியளிக்கிறது.
வால்பாறை நகராட்சியில் உள்ள மொத்தம் 21 வார்டுகளிலும் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவருமே தான் ஜெயிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்களையெல்லாம் ஓரம்கட்டி மக்கள் மத்தியிலும், இளைஞர் மத்தியிலும் நற்பெயர்
கொண்ட லோகேஸ்வரன் சுயாட்சி ஆக 10 ஆவது வார்டில் போட்டியிடுகிறார்.
தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் காணும் லோகேஷ்வரன்
10 வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வாக்கு சேகரிப்பின் போது செல்லும் இடமெல்லாம் மக்கள் சுயேட்சை வேட்பாளர் லோகேஸ்வரனை
ஆரத்தி எடுத்து வாழ்த்தி வருகின்றனர்.
இதனால் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 10 வார்டு தேர்தல் களம்
பரபரப்பாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் சுயாட்சி வேட்பாளர் லோகேஸ்வரனுக்கு
மக்கள் கொடுத்த வரவேற்ப்பை அறிந்த மற்ற வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.