கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் தலைப்பாகை (ஹிஜாப்) அணிவதற்கு தேவையற்ற எதிர்ப்புகளை உருவாக்கி சங்பரிவார ஆதரவு சக்திகள் வன்முறை செய்வதை கண்டித்து நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து கோவை மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செல்வபுரம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிளை செயலாளர் பீர்முகம்மது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மஜக வின் சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அன்சர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், சேட், பகுதி பொறுப்பாளர் இப்ராஹிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் HM.முஹம்மது ஹனீப், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்களும் கலந்து கொண்டு கோஷ்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண்கள், பெண்கள், கலந்து கொண்டு கண்டன கோசங்களை முழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் முஹம்மது யூசுப், இஸ்மாயில், சமீர்கான், கமால் பாஷா, நெளபல் ரஹ்மான், சம்சுதீன், செய்யது, ஹாருண், அப்பாஸ், செளக்கத், ஆசிக், ஆகியோர் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.