இந்தியாவில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை காட்டிலும், வெறும் 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவின் சொத்துக்கள் அதிகரித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள செய்தி, நாடு முழுவதும் அதிர்ச்சியுடன் வைரலாகி வருகிறது.
கடந்த 2019 – 2020ஆம் நிதியாண்டிற்கான தங்கள் சொத்து விவரங்களை தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் சமர்ப்பித்துள்ளன.
அப்படி சமர்பிக்கப்பட்ட கட்சிகளின் சொத்துக்களை தொகுத்து, “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்” என்ற அமைப்பு, தற்போது அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கையின்படி, கடந்த 2019 – 2020 ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ₹.4,874 கோடி சொத்து இருப்பதாக கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலேயே அதிக சொத்து வைத்துள்ள தேசிய கட்சிகளில் பாஜக முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 73 வது குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. அப்படியிருக்கும் போது, இந்தியாவில் கிட்டதட்ட 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் வெறும் 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சொத்து மதிப்பு, நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.
பாஜகவிற்கு அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி 2ஆம் இடம் பிடித்திருக்கிறது.
₹.698 கோடி சொத்துக்களுடன் இந்தியாவில் அதிகமான சொத்துக்கள் உள்ள கட்சியிகளின் பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்திருக்கிறது.
3 வது இடத்தில், ₹.588 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சி இடம் பெற்று உள்ளது.
4 வது இடத்தில், ₹.569 கோடி சொத்துக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.
5 வது இடத்தில், ₹.247 கோடி சொத்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
₹.29 கோடி சொத்து மதிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ₹.8 கோடி சொத்து மதிப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
குறிப்பாக, நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் வைப்பு நிதியில்தான் மிக அதிக அளவிலான சொத்துகளை வைத்து இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பாஜக வைப்பு நிதியாக மட்டும் 3 ஆயிரத்து 253 கோடி ரூபாய் வைத்திருக்கிறது.
சமாஜ்வாடி கட்சி 563 கோடியே 47 லட்சம் சொத்துகளுடன் உள்ளது.
மாநில கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி
₹.563 கோடியே 47 லட்சம் சொத்துகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ₹.301 கோடியே 47 லட்சத்துடன் 2 வது இடத்தில் உள்ளது.
3 வது இடத்தில் அதிமுக ₹.267 கோடியே 61 லட்சத்துடன் அடுத்த இடத்திலும் இருக்கிறது.
4 வது இடத்தில் திமுக ₹.162 கோடியே 42 லட்சமும் வைப்பு நிதியாக வைத்திருக்கிறது.
இதனிடையே, “நிலையான சொத்துக்கள் மற்றும் கடன், முன்தொகை, வைப்பு நிதி, மூலத்தில் வரி பிடித்தம், மூலதனம், இதர சொத்துக்கள் என்கிற 6 இனங்களில் இந்த சொத்துக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– பாரூக்.