கோவை மாவட்டம் பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஆழியார் உபவடிநில பகுதியைச் சேர்ந்த பழைய பாசன பகுதி மற்றும் புதிய பாசன பகுதியைச் சார்ந்த 21நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பதவிகளில் சார்ந்த நேரடித் தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த வகையில் வேட்டைக்காரன்புதூர் மார்ச நாயக்கன்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் துவங்கியது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்தலுக்கு இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஆனைமலை
-அலாவுதீன்.