கோவை: உலக இட்லி தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 100 விதமான இட்லி செய்து அசத்தியுள்ளனர்!
ஆண்டு தோறும் மார்ச் மாதம் 30ம் தேதி உலக இட்லி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இட்லியில் உள்ள நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கேட்டரிங் துறை மாணவர்கள் இணைந்து ராகி, கம்பு, கொள்ளு, பீட்ரூட் உள்ளிட்ட பொருட்களை வைத்து வித்தியாசமாம முறையிலும், வடிவங்களிலும் இட்லிகளை தயாரித்திருந்தனர்.
இதுகுறித்து கேட்டரிங் துறை இயக்குன்ர் தினா கூறுகையில், “இட்லியை பலரும் விருப்பமில்லாத உணவாக வைத்திருக்கும் நிலையில், அதன் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எங்கள் கல்லூரி மாணவர்கள் 100 விதமான இட்லிகளை தயார் செய்துள்ளனர். இதில் குழந்தைகளை கவரும் விதமாக லாலிபாப் இட்லி பீட்சா இட்லி ஆகியவையு. தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.