வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தை மகள் பலி!!
வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் கேபிள் டிவி ஆபரேட்டர், மகள் பலியாகினர். நள்ளிரவில் பைக்கிற்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டது.
புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்த தந்தை துரைவர்மா(49), மகள் மோகன பிரீத்தி(13) மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
கழிவறையில் இருந்து தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
-P. இரமேஷ் வேலூர்