கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அடுத்த
நவமலை செல்லும் வழித்தடத்தில் சென்ற கார்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்தி துரத்தி தேசப் படுத்திய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஒற்றை யானையின் அட்டகாசம் மேலும் தொடராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் ஒற்றை யானையை வனத்துக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
-M.சுரேஷ்குமார்
பொள்ளாச்சி.