சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
கையில் மண்ணெண்ணெய் கேனுடன்
இருவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் உள்ளே வந்துள்ளனர்
காலை 11.00 மணியளவில்
யாரும் எதிர்பார்க்காத வேளையில்
மாவட்ட ஆட்சியர் காரின் அருகே
திடீரென்று மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக்கொண்டு தங்களை காப்பாற்றுமாறு தீப்பெட்டியை கொளுத்தியுள்ளனர் தக்க நேரத்தில் காவல்துறையினர் விரைந்து தீ பிடிக்காமல் தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டு சமாதானம் செய்து விசாரித்ததில்,
அவர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இரு சக்கர வாகன விற்பனையாளராக கன்சல்டிங் செய்து வரும் இளங்கோவன் அவரது மனைவி ரமாபிரபா மற்றும் பிள்ளைகள் இருவர் உட்பட நான்கு பேர்கள் குடும்பத்துடன் வந்தது தெரியவந்தது மேலும் விசாரித்ததில் சேலம் இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை பகுதியில் கந்து வட்டி கொடுத்து வருபவரும் அதிமுக பிரமுகருமான ஆறுமுகம் மற்றும் அவரது மகன் நடேசன் ஆகியோரிடம் 2013ம் ஆண்டு பெற்ற கடனிற்கு வட்டி கட்டி வந்தோம் கடந்த 5 ஆண்டுகாலமாக அவர்களிடமிருந்து
பல்வேறு தொந்தரவுகள் வந்துகொண்டே இருந்தது அதனடிப்படையில்
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நாங்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனுசெய்தோம் அந்த மனு விசாரணை மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு வந்தபோது விசாரித்தனர் ஆறுமுகம் அவரது மகன்கள் விசாரணை முடிந்து
காவல்நிலையத்திற்கு வெளியே வந்தபோது எங்களை பார்த்து
முதலமைச்சரையே நாங்கள் பார்ப்போம் என்று ஒருமையில் பேசிவிட்டு சென்றனர்.
அதிலிருந்து தொடர்சியாக என்னையும்
என் மனைவி பிள்ளைகளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தவண்ணம் இருந்தனர் நேற்று நள்ளிரவு என்று பாராமல் ஆறுமுகமும் அவரது மகன் நடேசனும்
என் வீட்டு கதவை தட்டி பிரச்சினை செய்து தகாத வார்த்தைகளால் பேசியதோடு மட்டுமல்லாது பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால்
வாழ்வதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்தும்
எங்களுக்கு நடந்த அநியாயம் இனி யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சேலம் நகர காவல்நிலைய ஆய்வாளர்
விசாரணை முடிந்தவுடன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
ஆட்சியர் காரின் அருகிலேயே தீக்குளித்து தற்கொலை செய்ய வந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகமே பரபரப்பில் இருந்தது.
செய்தியாளர் சேலத்திலிருந்து
-ச.கலையரசன்.மகுடஞ்சாவடி.