கோவையில் அரசு சார்ந்த சேவைகளை பெறுவதற்கு இலவச இசேவை மையத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்..
கோவை இராமநாதபுரத்தில் ஆற்றல் அமைப்பு சார்பாக கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசு துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு கோவை 24×7 எனும் இலவச இசேவை மையத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதன் மூலம் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 100வார்டுகளின் அடிப்படை பிரச்னைகளான சாக்கடை,தெருவிளக்கு,குப்பை ,குடிநீர் வசதி உள்ளிட்டவைகளின் குறைகளை 9489872345 என்ற எண்ணின் மூலம் தகவல் தெரிவித்தால் உடனடியாக பிரச்சனைகள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவை சான்றிதழ்,உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கட்டனமில்லா முறையில் பெற்று தரப்படுகிறது.
தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் 20 இ சேவை மையங்கள், மாவட்ட பகுதியில் உள்ள 33 பேரூராட்சிகள் 7 நகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் இலவச இ சேவை மையம் தொடங்க உள்ளதாக ஆற்றல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
– சீனி,போத்தனூர்.