நடைபெற்ற கோயம்புத்தூர் மாநகராட்சி 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் மாமன்ற சிறப்பு கூட்டம் இன்று புதன்கிழமை காலை 11மணிக்கு கோவை மாவட்ட மேயர் திரு கல்பனா அவர்கள் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்றத்லில் நடைபெற்றது.
இந்த சிறப்பு மிக்க கூட்டத்தில் 5 மண்டலக்குழ தலைவர்கள்
1.வடக்கு மண்டலம்- வே.கதிர்வேல்
2.தெற்கு மண்டலம்- தனலட்சுமி
3.கிழக்கு மண்டலம்- இலஞ்செல்வி கார்த்திக்
4.மேற்கு மண்டலம்- தேய்வானை தமிழ் மறை
5.மத்திய மண்டலம்- மீணா லோகு
மற்றும் நிலைக்குழு தலைவர்கள்
1. கணக்குக் குழு தலைவர்-தீபா
2. பொது சுகாதார குழு தலைவர்- மாரி செல்வன்
3. கல்விக்குழு தலைவர்- மாலதி நாகராஜ்
4. வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர்- முபஷிரா
5. நகரமைப்பு குழு தலைவர்- சோமு என்னும் சந்தோஷ்
6. பணிக் குழு தலைவர்- சாந்தி முருகன்
7. நியமனக் குழு தலைவர்- ராஜேந்திரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.
கோவை மாவட்ட 99வது மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லாம் பாஷா அவர்கள் பொது சுகாதார குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பிறகு 2022-2023ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன வரவுகள் மொத்தம் ரூ2,317.97 கோடி எனவும்,வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் மொத்தம் ரூ2,337.28 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-2023ம் நிதியாண்டில் நிகரப்பற்றாக்குறை ரூ 19.31 கோடி என்று நிதி நிலை தாக்கல செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,
இது போன்ற பல திட்டங்ள் ஆலோசிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யது காதர்,குறிச்சி.