சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வசித்து வருபவர் அழகு என்பவரின் மகன் செல்லம். இவர் வெட்டுக்கண்மாய் என வருவாய்த்துறை பதிவேடுகளில் பதிவாகியுள்ள நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து ஹாலோ பிளாக் சுவர், ஆஸ்பெடாஸ் கூரை கொண்ட வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.
அவரது ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரை பலகை, ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டது. உத்தரவின்படி நீர்நிலையில் கட்டப்பட்டிருந்த வீடு இன்று (21-03-2022) இடித்து அகற்றப்பட்டது.
இந்நிகழ்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர், சிங்கம்புணரி மண்டல துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சிங்கம்புணரி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர். சிங்கம்புணரி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜானகிராமன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.