சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உப கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர் மற்றும் செல்லியம்பட்டி மின் பாதைகளில் உள்ள மின் கம்பங்களை தரம் உயர்த்தும் பணி நாளை (08-03-22) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமையன்று சிங்கம்புணரி நகர், நியூ காலனி, கீழக்காட்டு ரோடு, கீழத்தெரு, யூனியன் ஆபீஸ் ரோடு, NGO காலனி, அரசினம்பட்டி, மணப்பட்டி, SS நகர், செல்லியம்பட்டி, ஆலம்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சிங்கம்புணரி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.