சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகரின் தென்புறத்தில் மேலூர் சாலையில் அமைந்துள்ளது செட்டியார் குளம். மிகப்பழமையானது இந்தக்குளம்.
இந்தக் குளத்தை சீரமைப்பதற்காக கலைஞர் நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ், 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான துவக்க விழா சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிங்கம்புணரியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குளம் சீரமைப்புக்கான அடிக்கல் நாட்டினார்.
பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் இருவரும் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது வரவேற்புரை நிகழ்த்தினார்.₹.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற இருக்கும் இந்தத் திட்டத்தில் செட்டியார் குளத்தைச்சுற்றி சுற்றுச்சுவர் கட்டுதல், பேவர் பிளாக் நடைபாதை, வரத்துக்கால்வாய், சிறுவர் பூங்கா, மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி திட்ட இயக்குனர் ராஜா, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, திமுக ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், தொழிலதிபர் குடோன் சுப்பிரமணி, நகர அவைத்தலைவர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளாப்பூர் செல்வகுமார், இளைஞரணி ஒன்றிய – நகர நிர்வாகிகள் மனோகரன் மற்றும் அருண் பிரசாத், வள்ளி மனோகரன் மற்றும் அலாவுதீன் யாகூப் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் திமுக பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.