சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை தங்க சாலையில் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணப் பொடிகளின் வியாபாரம் மிக விமர்சையாக நடைபெறுகிறது.
இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது இந்த ஹோலி பண்டிகை.
ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.
ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.இது வசந்தகாலத் திருவிழா என அழைக்கப்படுகின்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.